tamilnadu

img

அனைத்து பள்ளிகளும் அக்டோபரில் ஹைடெக் ஆகிறது

கேரளம் படைக்கும் மேலும் ஒரு முன்மாதிரி

திருவனந்தபுரம், செப்.15- பொதுக் கல்விக்கான வேள்வியின் பயனாக கேர ளத்தின் அனைத்து பொதுக்கல்வி நிலையங்களும் வகுப்ப றைகளும் அக்டோபரில் ஹைடெக் ஆக மாற உள்ளன. இதன் மூலம் கல்வித்துறையில் இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் மாநிலமாக கேரளம் மாற உள்ளது.  எட்டாவது வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை உள்ள 4752 பள்ளிகளில் 44,705 வகுப்பறைகளில் மடிக்கணினி, மல்டிமீடியா புரஜெக்டர், டிஎஸ்எல்ஆர் கேமரா, ஒலிபெருக்கி, தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டுவிட்டன. ஒரு ஸ்மார்ட் கிளாஸ் அறைக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள 9941 பள்ளிகளின் வகுப்பறைகள் ஹைடெக்காக மாறி வருகின்றன.  14,693 பள்ளிகளில் பிராட்பாண்ட் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. ‘சமக்றா’ என்கிற கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் போர்ட்டல் செயல்பட்டு வருகிறது. அறிவியல், சமூக அறிவியல், கணிதம், மொழிகள் தொடர்பானவற்றை டிஜிட்டல் முறையில் தெரிந்துகொள்ள சமக்றா போர்ட்டல் பயன்படுவதாக நவகேரளம் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் செரியான் பிலிப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;